விஜய் டிவி விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் சீசன் 3 முடிந்த நிலையில் நான்காம் சீசன் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான பிக்பாஸ் புரோமோ விடியோ ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அதில் யார் பங்கேற்பார்கள் என்று பலரும் இப்போதே கணக்குப் போடத் துவங்கிவிட்டார்கள்

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கியது. இந்த சீசனில் பிபி வீட்டுக்குள் நுழைந்த இரண்டாவது போட்டியாளரான இயக்குனர் சூர்யா கிரண் முதல் சுற்றில் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் சுஜித்தாவின் சகோதரர் ஆவார். அவரது நீக்கம் ஹவுஸ்மேட்கள் மற்றும் தொகுப்பாளர் நாகார்ஜூனாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளியேற்றத்திற்குப் பிந்தைய உரையாடலில் சூர்யா கிரண் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டையும் போர்டில் உள்ள விலங்குடன் ஒப்பிட்டு, அவர்களுக்கு ஒரு ஆலோசனையை பகிர்ந்து கொண்டார். 'தேதாடி' ஹரிகாவை 'பாம்பு' என்று அழைத்து, யாருக்கும் விஷத்தை துப்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், நாகார்ஜூனா தனது பெயரை சூர்யா கிரணுக்கு நினைவூட்டி, பாம்புகளை நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார். இப்படி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.