LATEST: பாகுபலி பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் PAN INDIA 'ராதே ஷ்யாம்' படத்தின் அழகிய CHARACTER LOOK POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது.

அதனால் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அறிவுரைப்படி காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இன்று நடிகை பூஜா ஹெக்டேயின் பிறந்த நாள், இதனை முன்னிட்டு ராதே ஷ்யாம் படக்குழு நடிகை பூஜா ஹெக்டேயின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது. வெண்ணிறத்தை அடிப்படையாக கொண்டு இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. PRERANA எனும் பெயரில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் ரிலிஸ் தேதி போஸ்டர் வெளியானது.

அதில் 'ராதே ஷியாம்' ஜனவரி 14, 2022 அன்று திரையரங்குகளில், மஹாசங்கராந்தி நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய இணைப்புகள்

Pan India Magnum Opus Radhe Shyam New Poster Pooja Hegde

People looking for online information on Pooja Hegde, Prabhas, Radhe Shyam will find this news story useful.