"வித்யாசமான டைட்டில்".. "கலக்கல் ப்ரோமோ" - பிரபல சேனலில் வரும் புதிய சீரியல்.! கதை இதுதான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருமணம் பற்றிய இருவேறு கருத்துக்கள் கொண்ட இருவரின் வித்தியாசமான கதையை சொல்லும் இந்த பச்சக்கிளி எனும் புத்தம் புதிய தொடர் வரும் ஜூலை 4 திங்கள் முதல் இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மழைனா போதும் மெட்ராஸ் மக்களுக்கு பகோடா, டீ, ராஜா சார்.. ரசிகரின் கமெண்ட் ராஜாவின் ரியாக்‌ஷன்.!

சென்னை, ஜூன் 22, புதன் :– முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளுள் ஒன்றாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஜூலை 4–ந்தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள ‘பச்சக்கிளி’  என்னும் வித்தியாசமான புத்தம் புதிய தொடர் குறித்த முதல் ப்ரோமோ வெளியானதில் இருந்து பார்வையாளர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி உள்ளது.

காதல் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதையும், திருமணங்கள் ஒரு புனிதமான பந்தம் என்பதையும் வலியுறுத்தும் வகையில் இருவேறு துருவங்களான பச்சைக்கிளி (நடிகை மோனிஷா அர்ஷக்) மற்றும் ஆதித்யா (நடிகர் தீபக்) ஆகியோரின் வாழ்க்கையை பற்றிய ஒரு பார்வையை இந்த ப்ரோமோ வழங்குகிறது.



இந்த ப்ரோமோவில் பச்சைகிளியின் மூன்று அண்ணன்களான மீனாட்சி சுந்தரம் (நடிகர் ஸ்டாலின் முத்து), அழகர் (விஜய் ஆனந்த்) மற்றும் வேலு (அஸ்வின்) ஆகியோர் இவர்களது தங்கைக்கு கிளி ஜோசியம் பார்க்கிறார்கள். அப்போது தங்கையின் எதிர்காலத்தைப் பற்றி கூறுமாறு கிளி ஜோசியம் பார்ப்பவரிடம் கேட்கிறார்கள். கிளி அவளுக்கு கடவுள் முருகன் படத்தை எடுத்துக் கொடுக்கிறது. எனவே அவளது வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்று கிளி ஜோசியம் பார்ப்பவர் கூறுகிறார். இதேபோல் அந்த ப்ரோமோவில் ஊரில் உள்ள அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்கும் மகிழ்ச்சியான பெண்ணாகவும் பச்சைக்கிளி வலம் வருகிறாள். மறுபுறம் ஆதித்யா வழக்கறிஞராக வருவதும் இந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.

காதல் மற்றும் மனப் போராட்டம், குடும்பங்களின் முக்கியத்துவம், உடன்பிறந்த உறவுகளின் பாசம் ஆகியவற்றுடன் வாரம் முழுவதும் பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு, மேலும் குடும்பங்களை ஒன்றிணைப்பதில் பெண்களின் முக்கியத்துவத்தையும் பச்சைக்கிளி எடுத்துரைக்க வருகிறாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொடரை வரும் 4–ந்தேதி இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.

Also Read | "நல்ல வேளை சிரிக்கல.." ..‘வீட்ல விசேஷம்’ க்ளைமாக்ஸில் செம்ம ஸ்கோர் செய்த கீதா கைலாசம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Pachakili New Serial Colors Tamil TV Promo

People looking for online information on Colors Tamil, Pachakili, Tv Serial will find this news story useful.