கபாலி, காலா படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் நீலம் புரடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ’பரியேறும் பெருமாள்’, ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களை தயாரித்தார்.

இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படம் ’சல்பேட்டா’. இதில் ஆர்யா, தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். குத்துச்சண்டையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது.
குரங்கு பொம்மை படத்தை தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் இருந்த சிந்தாதிரிப்பேட்டையை கதைக்களமாக கொண்ட ’பேட்டை’ என்ற நாவலை எழுதிய தமிழ்ப்பிரபா ’சல்பேட்டா’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதுகிறார்.
Tags : Pa Ranjith, Arya, Dinesh, Salpetta