BBC தேர்வு செய்த சிறந்த பெண்கள்.. பா.இரஞ்சித் இசைக்குழுவில் இருந்த பாடகி தேர்வு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.இரஞ்சித் இசைக்குழுவில் இருந்த பாடகி பி.பி.சியின் சிறந்த பெண்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் தற்போது ஆர்யா நடிப்பில் சல்பேட்டா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் பாக்சிங்கை மையப்படுத்தி உருவாகி வருகிறது. மேலும் இவர் சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒன்றாக, கேஸ்ட்லெஸ் கலக்டீவ் என்ற இசைக்குழுவையும் நடத்தி வருகிறார். 

பிபிசி 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை தகர்த்தெறியும் 100 பெண்களின் பட்டியலை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருகிறது. இதில், உலகளவில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னை மட்டுமல்லாது தன்னை சார்ந்த சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் பிபிசி செய்தி நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்கள் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.

அதில்  இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவான கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் பாடகி இசைவாணி இடம்பெற்றிருக்கிறார். சென்னையை சார்ந்த இசைவாணி கேஸ்ட்லெஸ் கலைக்குழுவின் முக்கியமான பாடகி,   கானா பாடல்கள் மூலம் பலரின் பாராட்டுக்களைப்பெற்றவர். கானா பாடல்கள் என்றால் ஆண்கள் மட்டுமே பாடுகிறவர்கள் என்பதை உடைத்து அந்தத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.

கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் மூலமாக சமூகக்கருத்துக்களை மேடைகளில் பாடி பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுவரும் குழுவினருக்கு  உலகின் பல்வேறு இடங்களிலிருந்து அங்கீகாரமும், பாராட்டுக்களும் கிடைத்துவருவதால் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் பெரும் மகிழ்ச்சியுடன் இசைவாணியை வாழ்த்துவதோடு, குழுவினரின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடுவோம்  என்று கூறுகிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

பா.இரஞ்சித் இசைக்குழுவில் சாதனை படைத்த பெண் | pa ranjith's casteless collective singer isaivani record in bbc

People looking for online information on BBC, Casteless collective, Isaivani, Pa Ranjith will find this news story useful.