கோலார் தங்க சுரங்கத்தில் பா. ரஞ்சித்.. மாளவிகா பகிர்ந்த 'தங்கலான்' படத்தின் BTS புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சகோதரர் ராஜமௌலி".. ஆஸ்கார் விருது பெற்ற RRR பட பாடல் குறித்து சீமான் ட்வீட்!

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தங்கலான் ஷூட்டிங்கில் பா. ரஞ்சித்  புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இயக்குனர் ரஞ்சித் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலார் தங்க சுரங்கத்தின் பின்னணியில் அதிகாலை சூரிய உதய வெளிச்சத்தில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | ரவீந்தர் மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. நாதஸ்வரம் தவில் இசைக்க.. அவரே வெளியிட்ட வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Vikram Thangalaan Movie Shooting Spot BTS Image

People looking for online information on Pa Ranjith, Thangalaan, Thangalaan Movie Shooting Spot, Vikram will find this news story useful.