பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள திரைப்படம் தொடர்பாக அசத்தலான அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்திருந்த கோப்ரா திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், விக்ரமின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக தமிழ் சினிமா திரை வடிவில் காண ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில், ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார்.

மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களால் மக்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடைசியாக "நட்சத்திரம் நகர்கிறது" என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை பா. ரஞ்சித் இயக்க உள்ளார்.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை "சியான் 61" என குறிப்பிட்டு வந்த நிலையில், புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அளித்திருக்கிறது.

அதன்படி இந்த படத்தின் பெயர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தினை தயாரித்து வரும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் நாளை இரவு 8 மணிக்கு (23/10/22) படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Vikaram Movie Title will be announced Tomorrow

People looking for online information on Chiyaan 61, Pa Ranjith, Vikram will find this news story useful.