''சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரை கொன்ற...'' - இயக்குநர் பா.ரஞ்சித் கோபம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அவரது பதிவுகள் அவ்வப்போது வைரலாவது வழக்கம்.

இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இயக்குநர் பா.ரஞ்சித், ''நீதி என்பது நிவாரணம் அல்ல.. சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரை கொன்ற சுவர் போல இனி எங்கும் சுவர்கள் இருக்கக்கூடாது என்கிற உத்திரவாதம் தேவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விரல் மையினால் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களே.. உங்களின் கள்ள மௌனம் அவர்களை இன்னொரு முறை கொன்று கொண்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''தனித் தொகுதியில் நின்று அரசியல் அதிகாரத்தை அடைந்தவர்கள்.. தற்போது இறந்து போன 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனிதமற்ற_மனிதர்கள்'' என தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith tweets about Mettupalayam Houses collapse incident

People looking for online information on Mettupalayam, Pa Ranjith will find this news story useful.