விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
Also Read | "கல்யாண பொண்ணு என்னா அழகு" .. எப்பவும் சுத்தி போடுற ரஷ்மிகாவே கண்ணு வெச்சுட்டாங்களே..
விருமாண்டி
கமல், பசுபதி, நெப்போலியன், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் விருமாண்டி. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். ஹேராம் படத்துக்குப் பிறகு கமல் இயக்கிய இரண்டாவது படமாக விருமாண்டி உருவானதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. முதலில் இந்த படத்துக்கு கமல் ‘சண்டியர்’ என பெயர் வைத்திருந்தார். ஆனால் அந்த தலைப்புக்கு எதிர்ப்புகள் எழுந்ததால் பின்னர் ’விருமாண்டி’ என பெயர் மாற்றப்பட்டது. நான் லீனியர் பாணியில் உருவான விருமாண்டி திரைப்படம் ரிலீஸீன் போது பெற்ற பாராட்டுகளை விட இப்போது அதிகளவு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு ஒரு ‘cult’ திரைப்படமாக இருந்து வருகிறது.
கமல் – பா ரஞ்சித் கூட்டணி…
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விக்ரம் படத்தின் ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித் , "மதுரையை மையமாக வைத்து கமல்சார் நடிப்பில் படம் இயக்கணும்னு என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் கமல்சாரோடு இணைய உள்ளேன்., விருமாண்டி எனக்கு பிடித்த படம். கோட் சூட் போட்டும் மதுரையில் படம் எடுக்கலாம். கமல் சார் நடித்த பழைய விக்ரம் அருமையான படம் " என்று பேசினார். கமல் பேசும் போது, "பா.ரஞ்சித் உங்கள் எதிர்பார்ப்புக்கு விதை போட்டு சென்றிருக்கிறார் அதுவும் நடக்கத்தான் போகிறது". என கூறினார்.
விழாவில் முன்னணிக் கலைஞர்கள்…
நேற்று நடைபெற்ற விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில், இயக்குனர்கள் சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் ப்ட குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் படத்தின் டிரெய்லர் & இசை வெளியிடப்பட்டது. டிரெய்லர் யூடியூப்பில் வெளியான உடன் செம ஹிட்டடித்தது. விழா சம்மந்தமான செய்திகள் இணையத்தில் கவனத்தைப் பெற்றன.
பா ரஞ்சித்தின் அடுத்தடுத்த படங்கள்…
பா ரஞ்சித் தற்போது ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நடிகர் விக்ரம் நடிப்பில் ’சியான்61’ என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு ஆகும். இந்த படத்துக்குப் பின்னர் அவர் கமல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8