பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது'.. வெளியான கலர்ஃபுல்லான முதல் சிங்கிள் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நட்சத்திரம் நகர்கிறது படத்தின்  முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read பாரிஸ் நகரில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. உலகப்புகழ் பெற்ற இடத்தில் இருந்து வெளியிட்ட வைரல் ஃபோட்டோ!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது.

இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம்  “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரங்கராட்டினம் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் அறிவு இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை கிருஷ்ணா, கானா முத்து, சங்கீதா சந்தோஷம், கவிதா கோபி, கார்த்திக் மாணிக்கவாசகம் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தி, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுச்செய்துள்ளது.

இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.  இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல்.. யுவன் & ஆதி குரலில் ரிலீசான கலர்ஃபுல் 'தியாகி பாய்ஸ்'!

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது'.. வெளியான கலர்ஃபுல்லான முதல் சிங்கிள் பாடல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie First Single Rangarattinam

People looking for online information on Natchathiram Nagargirathu Movie, Natchathiram Nagargirathu Movie First Single, Pa Ranjith, Rangarattinam Song will find this news story useful.