பா. ரஞ்சித் இயக்கும் புதிய காதல் திரைப்படம்.. வெளியான வண்ணமயமான FIRST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

Advertising
>
Advertising

Also Read | வியர்க்க விறுவிறுக்க இரவில் உடற்பயிற்சி.. நடிகை இலியானா பகிர்ந்த WORK OUT போட்டோஸ்!

தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது. இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம்  “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய டென்மா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தி, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுச்செய்துள்ளது. இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளாது.  சர்ரியலிசம் பாணியில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

Also Read | மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட 'தி லெஜண்ட்' பட தமிழக உரிமை.. எம்புட்டு கோடி தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie First Look Poster

People looking for online information on Natchathiram Nagargirathu Movie, Natchathiram Nagargirathu Movie First Look Poster, Pa Ranjith will find this news story useful.