பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது".. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின்  சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ் விவரம்  வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: LYCA நிறுவனத்துக்காக விதார்த் நடிக்கும் புதிய படத்துக்கு MGR பட தலைப்பா? வேறமாரி அப்டேட்!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில்  நடத்தது, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு கடந்த ஆண்டு நிறைவுச்செய்தது.

இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.  இந்த படத்தின் போஸ்டர்கள், டீஸர்‌ & டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இந்த படம் இந்திய சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு CBFC, 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நீலம் புரொடக்ஷன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பில்லா INTRO சீன் மாதிரியே இருக்கே.. ஏர்போர்ட்டில் அஜித்குமார்! இணையத்தை கலக்கும் செம வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Censored A

People looking for online information on Natchathiram Nagargirathu, Pa Ranjith, Pa Ranjith Natchathiram Nagargirathu Movie will find this news story useful.