சூப்பர்.. பிரபல OTT-யில் பா.ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம் நகர்கிறது'.. சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படம் பிரபல OTT-யில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல மருத்துவமனைக்கு சென்ற ‌ராஷ்மிகா.. டாக்டர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்! என்னாச்சு?

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். 'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக இயக்கி இருந்தார்.

இந்த படத்தில்  காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் இந்திய சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு, இந்த படத்திற்கு CBFC, 'A' சான்றிதழ் வழங்கியது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.  

இந்நிலையில் இந்த படம், தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்றுமுதல் வெளியாகி உள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படத்தின் விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

"நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் காதல், பாரபட்சம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றிற்கு மேலாக  எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றிய படம்" என இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த படம் பற்றி குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. படத்தின் GENRE இது தானா? படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargiradhu Movie Streaming on Netflix OTT

People looking for online information on Natchathiram Nagargiradhu Movie, Netflix OTT, Pa Ranjith will find this news story useful.