விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'.. ரிலீஸ் எப்போ? பா‌. ரஞ்சித் பகிர்ந்த சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தின் அப்டேட்களை இயக்குனர் பா. ரஞ்சித் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் பா. ரஞ்சித் தங்கலான் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "தங்கலான் படத்தின் 80% படப்பிடிப்பு நிறைவடைந்தது. 55 நாட்கள் கோலார் தங்க வயலில் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு கோலார் தங்க வயலில் மீதம் உள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் பணிகள் நிறைய உள்ளன. 2023 ஆம் ஆண்டு இறுதியில் தங்கலான் படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக" பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith answer about Thangalaan Movie Release plan

People looking for online information on Pa. Ranjith, Thangalaan will find this news story useful.