கமல்ஹாசன் நடிப்பில் புதிய படம்.. எப்போ? பா. ரஞ்சித் கொடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

Advertising
>
Advertising

இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.

இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை  இயக்கினார். இந்த படத்தில்  காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்தனர்.
இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தற்போது நடிகர் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார்.

மேலும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது. ஆர்யா நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் பா. ரஞ்சித், கமல்ஹாசன் உடன் இணைய இருக்கும் படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். "கமல் நடிக்கும் புதிய படத்தின் எழுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்கலான் படத்தின் பணிகள் முடிந்ததும் கமல்ஹாசனுடன் இணையும் புதிய படத்தின் திரைக்கதை வேலைகள் முழுவீச்சில் துவங்கும்" என்று  பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith answer about his next Kamal Haasan film

People looking for online information on Kamal Haasan, Pa Ranjith will find this news story useful.