'"கபாலி கமர்சியலா பெரிய ஹிட்டு".. "மன உளைச்சல்ல இருந்தேன்".. மனம் திறந்த பா. ரஞ்சித்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி மற்றும் காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர்.

Advertising
>
Advertising

Also Read | "மறக்கமுடியாத ஒரு படம் கொடு நெல்சன்".. ஜெயிலர் படம் குறித்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

கடைசியாக 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கினார். சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில்  நடத்தது, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு கடந்த ஆண்டு நிறைவுச்செய்தது.

இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.  இந்த படத்தின் டீஸர் & டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில் பேசிய பா. ரஞ்சித், "'அட்டகத்தியில் துவங்கிய    என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். தாணு சாரிடம் கபாலி படத்தின் போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு படம் கமர்சியலாக ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் நெகடிவ் விமர்சகர்கள் வந்தன. அதனால் மன உளைச்சலில் இருந்தேன், அப்போது தாணு சார் தான் கூப்பிட்டு படத்தின் கலக்சன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்ட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்" என பா. ரஞ்சித் பேசினார்.

Also Read | BREAKING: 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. இந்த ஊர்லயா?

'"கபாலி கமர்சியலா பெரிய ஹிட்டு".. "மன உளைச்சல்ல இருந்தேன்".. மனம் திறந்த பா. ரஞ்சித்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith about Kabali movie in Natchathiram Nagargirathu Audio Launch

People looking for online information on Kabali, Kabali movie, Natchathiram Nagargirathu, Natchathiram Nagargirathu Audio Launch, Pa Ranjith will find this news story useful.