பிரபல இயக்குநரின் மகளுக்கு பிரம்மாண்டமான திருமணம்... பல நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநரின் மகள் திருமணத்திற்கு பல்வேறு நட்சத்திரங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பி.வாசு. ரஜினியை வைத்து இவர் இயக்கிய மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட சினிவாவும் இயக்கி வந்தார். இவரது மகனான ஷக்தியும் ஹீரோவாக நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது பி.வாசுவின் மகள் அபிராமி வாசுவின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன் பொன் சுந்தருக்கும் இவருக்கும் சென்னையில் திருமணம் நடந்துள்ளது. 

இதில் பல்வேறு திரைத்துறை நட்சத்திரங்களான பிரபு, குஷ்பூ உள்ளிட்டோர் குடும்பத்துடன் வந்து, புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்தினார்கள். இதையடுத்து இணையத்தில் வெளியான இந்த புகைப்படங்கள், வைரல் அடித்து வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பி.வாசு மகளுக்கு திருமணம் | p vasu daughter marriage popular celebrities kushboo prabhu attends

People looking for online information on Abhirami Vasu, Khushboo, P Vasu, P Vasu Daughter, Prabhu will find this news story useful.