ஓவியா கேட்ட கேள்வி.. ஓடி வந்து கட்டிக்கொண்ட ஜூலி.. BEHINDWOODS CELEBRITY STAR DANCER டிரெய்லர்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 7 வருடங்களாக  Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா வெற்றிகரமாக நிகழ்ந்து வருகிறது.

Oviya Julie moment Behindwoods Celebrity Star Dancer video
Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கு விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்றன.

Oviya Julie moment Behindwoods Celebrity Star Dancer video

இந்நிலையில் டிஜிட்டல் ஹிஸ்டரியில் முதல் முறையாக செலிபிரிட்டி ரியாலிட்டி டான்ஸ் போட்டி நிகழ்வான Behindwoods Celebrity Star Dancer நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நடுவர்களாக திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டரான கலா மாஸ்டர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்வு மூலம் பிரபலமான திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைக்கும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர்.

பிஹைண்ட்வுட்ஸ் வீஜே நிக்கி, கலக்கப்போவது யாரு குரேஷி மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அஷ்வின், ரித்திகா, சுனிதா, தீபா அக்கா, KPY பாலா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்குபெற்றனர்.

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை ஓவியா, ஜூலி மற்றும் நடிகர் ரியோ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இதில் ஓவியா எண்ட்ரி கொடுத்தவுடன் ஜூலியை பார்த்து, “ஹாய் ஜூலி..  எப்படி இருக்க? உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று கேட்டதும் ஓடிவந்து ஓவியாவை ஜூலி கட்டிக்கொண்டார்.

மேலும் பல நெகிழ்வான மற்றும் கொண்டாட்டமான தருணங்கள் அடங்கிய இந்நிகழ்ச்சியின் பிரத்தியேக நிகழ்வுத் தொகுப்புகள் அடங்கிய வீடியோக்கள் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளி அன்று மதியம் 3.30 மணிக்கும்  BehindwoodsTV-யில் வெளியாகவுள்ளன.

ஓவியா கேட்ட கேள்வி.. ஓடி வந்து கட்டிக்கொண்ட ஜூலி.. BEHINDWOODS CELEBRITY STAR DANCER டிரெய்லர்! வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Oviya Julie moment Behindwoods Celebrity Star Dancer video

People looking for online information on Award Function, BEHINDWOODS CELEBRITY DANCER 2021, Behindwoods Gold Medals, Biggboss, BiggBoss Julie, BiggBoss Oviya, BiggBoss Oviya Julie, Biggbosstamil, BiggBossTamil5, Julie, Oviya, Oviya Julie will find this news story useful.