மலையாள படங்களில் அறிமுகமாகி தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ஓவியா. களவாணி, மன்மதம் அம்பு, புலி வால் ஆகிய படங்களில் நடித்தார்.
பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதைத் தொடர்ந்து அவர் நடித்த 90 எம்எல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக அவர் விமலுடன் நடித்த களவாணி 2 படம் வெளியானது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சினிமா, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் முடங்கி உள்ளது. பிரபலங்களும் பொதுமக்களும் முன்பை விட சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் நடிகை ஓவியா லைவ் பேட்டி காணப்பட்டார்.
க்வாரண்டைன் சமையத்தில் இருக்கும் மனநிலை பற்றியும் தனது ஆசைகள் பற்றியும் ஓவியா இதில் குறிப்பிட்டார். குறிப்பாக தான் டேட்டிங் செய்ய விரும்பும் பிரபலம், அடிக்கடி கேட்கும் இசை உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்க்க கீழ்க்காணும் லிங்கை சொடுக்கவும்.