93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடக்கிறது.
இதில் சிறந்த படத்துக்கான விருதினை Nomadland படம் பெற்றது. இதேபோல், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை இதே நோமேட்லாண்ட் (Nomadland)படத்துக்காக, இப்படத்தின் சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் (Chloé Zhao) பெற்றார்.
இதேபோல் Ma Rainey's Black Bottom படத்துக்காக சிறந்த மேக் அப் மற்றும் ஹேட் ஸ்டைலிங் விருதினை செர்ஜியோ லோப்ஸ்-ரிவேரா (Sergio Lopez-Rivera), மியா நீல் (Mia Neal) மற்றும் ஜாமிகா வில்சன் (Jamika Wilson) பெற்றுள்ளனர். இவர்களுள் மியா நீல் மற்றும் ஜாமிகா வில்சன் ஆகியோர் இந்த கேட்டகரியில் வரலாற்றில் முதல் முறையாக இந்த விருதுகளை பெறும் கருப்பின பெண்கள் என உலக சினிமா ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.