சென்னை, 23, பிப்ரவரி 2022: விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஓடிடி வெர்ஷன், அதாவது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியது.
கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்திருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் கமலஹாசன், விக்ரம் திரைப்படத்தின் நிறைவு படப்பிடிப்பு பணிகளுக்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுத்து வழங்கும் பணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், மிக விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு தன்னுடைய அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
வனிதா அழுகை
இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களிடையே தொடர்ந்து வலுவான டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. இதில் வனிதா - நிரூப், வனிதா - ஜூலி, அதன்பிறகு வனிதா - பாலாஜி என்ன முரண்களும் சண்டைகளும் தொடங்கின.
கிட்டத்தட்ட முதல்வாரம் வனிதா அபிராமியுடன் காப்பி பொடி பிரச்சனைக்காக சண்டையிட்டது தொடங்கி பல பிரச்சினைகளுக்காக ஆக்ரோஷமாக நடந்து கொண்ட அதே சமயம், மனம் விட்டு அழுது பிக்பாஸிடம், “நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறேன்.. எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாரும் செய்கிறார்கள்? என்னை மட்டும் என் குறி வைக்கிறார்கள்?” என்று பேசியிருக்கிறார்.
ரிஸ்க் எடுக்க முடியாது.. Quit பண்றேன்
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டின் கதவைத் தட்டி, பிக்பாஸ் வீட்டைவிட்டு போவதற்கு வனிதா முயற்சிக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை பிக்பாஸ் கன்ஃஎஷன் ரூமுக்கு அழைத்துப் பேசுகிறார்.
அப்போது அவரிடம் பேசும் வனிதா, “பிக்பாஸ் என்னுடைய மென்டல் ஹெல்த் மற்றும் பிசிக்கல் ஹெல்த் பற்றி கருத்தில்கொண்டு நான் இனி ரிஸ்க் எடுக்க முடியாது, நான் தானாகவே முன்வந்து இந்த ஷோவில் இருந்து விலகுகிறேன். எதுவாக இருந்தாலும் நான் வெளியே போய் பார்த்துக் கொள்கிறேன்!” என கூறுகிறார்.
இறுதி முடிவா?
அப்போது பிக்பாஸ், “வனிதா.. இதுதான் உங்க இறுதி முடிவா?” என்று கேட்க, வனிதா, “ஆமாம் பிக்பாஸ்” என கூற, “சரி நீங்கள் வெளியே போகலாம்” என்று பிக்பாஸ் கூறுகிறார். வெளியே போகலாம் என்பது கன்ஃபெஷன் ரூமில் இருந்து மட்டும் அல்ல, பிக் பாஸ் வீட்டில் இருந்தும் தான் என்பது போல் தெரிகிறது.
ஏன் என்றால் அடுத்தடுத்த ப்ரோமோக்களில் வனிதாவை காண முடியவில்லை, எனவே வனிதா பிக்பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது உறுதியாகி விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.