SAMANTHA-வின் OO SOLRIYA MAMA பாடலுக்கு செம்ம குத்தாட்டம்! பட்டையை கிளப்பும் பிரபல சீரியல் நடிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ்:  நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா.

Advertising
>
Advertising

புஷ்பா திரைப்படம்:

ஆந்திர பிரதேச காடுகளில் செம்மரக்கடத்தல் செய்யும் புஷ்பராஜ் என்கிற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தன்னா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை சுகுமார் இயக்கியிருக்கிறார்.

பாடல்கள் அனைத்தும் ஹிட்

தேவி ஸ்ரீபிரசாத் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். மைத்ரி மூவிஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை தமிழில் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டு இருந்தது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஹிட் அடித்தன.

அந்த வகையில் தமிழில் சாமி சாமி, ஓ சொல்றியா மாமா உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்தன. இதில் தமிழில் உருவான ஓ சொல்றியா மாமா திரைப்பட பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி நடித்திருப்பார்.

சமந்தாவின் ஓ சொல்றியா மாமா

இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடி நடித்திருக்கிறார் என்று செய்தி வெளியான உடனேயே ரசிகர்கள் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கிவிட்டனர். அதன்பிறகு இந்த பாடலின் லிரிக் விடியோ முதலில் வெளியானது. 

கேளிக்கை விடுதியில் நடனமாடும் பெண்ணாக இந்த ஒரு பாடலில் மட்டும் நடிகை சமந்தா, அல்லு அர்ஜூனுடன் நடனமாடி நடித்திருப்பார். இந்த பாடலின் தமிழ் வெர்ஷனை பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாடி இருக்கிறார்.

இந்த வருடத்தின் ட்ரெண்டிங் பாடல்

ஒரு சொல்றியா மாமா .. ஓ ஓ ஓ சொல்றியா மாமா .. என்று பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் உருவான இந்த பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இப்பாடல் வரிகளுக்கு திரைப்படக் குழுவினர் தரப்பிலிருந்து விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

எனினும் இந்த திரைப்பட பாடலில் இன்னும் டிரெண்டிங்கில் தான் இருக்கிறது. இந்த வருடத்தின் ஹிட் பாடல்களில் இந்த பாடல் ஒரு பாடலாக சேர்ந்துவிட்டது. நகரம் முதல் கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் இந்த பாடலை தற்போது பலரும் முனுமுனுத்து வருகின்றனர்.

சீரியலிலும் இந்த பாடல் ஏற்பத்திய தாக்கம்

இந்த நிலையில், இந்த வீடியோ பாடல், ஜீ தமிழ் சீரியல் வரை, தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அந்த நேரத்தில் ட்ரெண்டிங்கில் என்ன இருக்குமோ அந்த விஷயங்கள் இடம்பெறுவதை காணமுடியும். சமீபகால சீரியல்களில் இந்த போக்கு அதிகரித்திருக்கிறது. அதாவது சீரியல்களில் நிகழ்காலத்தில் நடக்கும் விஷயங்கள் பிரதிபலிக்கும் வகையில் இந்த மாதிரியான காட்சிகள் அமைக்கப்படும்.

கோகுலத்தில் சீதை தொடர்

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இந்த சீரியலின் நாயகன் தன்னுடைய ஹார்ட் ஃபிரண்டை கண்டு பிடித்து திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் இருந்தார். ஆனால் அவருடனேயே இருந்த நாயகிதான் தன்னுடைய சிறுவயது ஹார்ட் ஃபிரண்ட் என்பது நாயகனுக்கு கொஞ்ச காலம் தெரியாமல் இருந்தது.

‘ஓ சொல்றியா மாமா’ - கோகுலத்தில் சீதை வெர்ஷன்

இதனைக் கடந்து தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டனர். மேலும் பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இரண்டு நடிகைகளுடன், இந்த சீரியலின் நாயகன் ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரியல் நடிகர்கள் நடித்திருக்கும், இந்த குறிப்பிட்ட புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Read: "சாப்ட்டுட்டு இருந்தவர் எழுந்து".. "அஜித் செய்த இந்த விஷயம் Hats off".. ராஜமௌலி Breaks! மாஸ் பேச்சு! வீடியோ

Also Read: "நல்லாருக்கேன்யா!".. இளமை இதோ.. இதோ.. இளையாராஜ-வுக்கு என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட வேறமாரி வீடியோ! கமலின் Viral ரீ-ட்வீட்!

Oo Solriya Mama Gokulathil Seethai Serial version Samantha

People looking for online information on Gokulathil Seethai Serial, Oh Solreya Maama, Oh Solriya mama, Oo Solreya Mama, Oo Solreya Mama Oo Oo Solreya Mama, Pushpa The Rise, ZeeTamil will find this news story useful.