''ONLINE CLASSES-களில் இத்தனை பிரச்சனை இருக்கு..!" - இளம் இயக்குநர் பளீச் கருத்து.. செம ரெஸ்பான்ஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆன்லைன் க்ளாஸ் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பளீச் கருத்து தெரிவித்துள்ளார். 

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் எல்.கே.ஜி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இவர் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி ஆன்லைன் க்ளாஸ் குறித்து தனது கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஆன்லைன் க்ளாஸ் நடத்துவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. தொடர்ந்து பல மணி நேரம் கம்ப்யூட்டரையோ செல்ஃபோனையோ பார்ப்பதால், பெரியவர்களுக்கே பிரச்சனை ஏற்படுகிறது. எப்படி குழந்தைகள் இதை சமாளிப்பார்கள். அது அவர்களுக்கு பெரிய ஸ்ட்ரெஸை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்று வழிகளை கண்டறிய வேண்டும். எல்லோர் வீட்டிலும் இப்படி ஆன் க்ளாஸ் அட்டன்ட் செய்யும் வசதிகளும் இருப்பதில்லை. அதனால் சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள் இதுகுறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்'' என அவர் வீடியோவிள் பளீச் கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜியின் இந்த வீடியோவுக்கு ரசிகர்களிடையே செம வரவேற்பு கிடைத்துள்ளது.

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Online Class பற்றி இளம் இயக்குநர் பளீச் கருத்து | nayanthara's mookuthi amman director rj balaji about online classes

People looking for online information on Mookuthi Amman, Nayanthara, Online Classes, RJ Balaji will find this news story useful.