முதன்முறையாக தமிழில் பிக்பாஸ் ஆரம்பித்த போது பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை. ஆனால் போட்டியாளர்கள் கொடுத்த கண்டெண்ட்கள் நிகழ்ச்சியின் டிஆர்பி-யை தெறிக்க விட்டன. இதனால் அடுத்தடுத்த பிக்பாஸ் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் இயல்பான எதிர்பார்ப்பு வந்துவிட்டது.
இரண்டாவது, மூன்றாவது என தொடர்ந்து தற்போது நான்காவது சீசனில் வந்து நிற்கிறது. எல்லா பிக்பாஸ் சீசனிலும் ஒரு லவ் ஸ்டோரி இருந்ததால் இந்த சீசனிலும் என்ன இன்னும் காணோம்? என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். அநேகமாக இன்னும் ஒருசில நாட்களில் அது தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைமை இப்படி இருக்க நேற்று முன்தினம் பாலாஜி பேசிய 'சரி வச்சுக்கோங்க' என்னும் வார்த்தை சமூக வலைதளங்களில் வைரல் மெட்டீரியல் ஆக மாறிவருகிறது. இதையடுத்து நான்கு பிக்பாஸ் சீசனிலும் வைரலான வார்த்தைகளை எடுத்து அதற்கும் ஒரு மீம் போட்டு விட்டனர். தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவிவரும் அந்த மீம் இதுதான்!