"நிச்சயமா ஒருநாள் நீங்க அவங்கள கொன்றுவீங்க!".. மிரர் டாஸ்க்கில் ராஜூவின் சரவெடி பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு மிரர் டாஸ்கில் விளையாண்டு வருகின்றனர்.

one day you will kill iykki raju says to priyanka biggbosstamil5
Advertising
>
Advertising

இதற்கென பிரிக்கப்பட்ட இரண்டு அணிகளுள், சிபி, நிரூப், இசை, ஐக்கி, பிரியங்கா, பாவனி ஆகியோர் ஏ அணியிலும்,  அக்‌ஷரா, அபினய், வருண், இமான், ராஜூ, தாமரை ஆகியோர் பி அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

one day you will kill iykki raju says to priyanka biggbosstamil5

இதில் ஒரு அணியில் இருக்கும் நபர்கள், தங்களைப் போன்றும், மற்ற அணியைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் எதிரணியில் இருக்கும் ஒவ்வொரு நபரின் கண்ணாடி பிம்பமாகவும் செயல்பட வேண்டும் என்பதே இந்த டாஸ்க்கின் விதிமுறை.

one day you will kill iykki raju says to priyanka biggbosstamil5

இதில் கண்ணாடியாக இருக்கும் நபரும், நார்மலாக இருக்கும் நபரும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக்கொண்டு உரையாடிக் கொள்ளவேண்டும். அதில் கண்ணாடியாக இருக்கும் நபர், எதிரில் இருக்கும் தன்னுடைய நிஜத்தை நோக்கி, தமது விமர்சன கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

இதில் பேசும், இருவரில் யாராவது ஒருவருக்கு, உரையாடலைத் தொடர விருப்பம் இல்லாமல் பிடித்துக் கொண்டு இருந்த கையை விட்டு விட்டாலும், அந்த அணியைச் சேர்ந்தவர்கள் எதிரணிக்கு அவரின் ஒரு பேட்ஜை கொடுத்துவிட வேண்டும். இறுதியில் எந்த அணியில் அதிக பேட்ஜ்கள் உள்ளதோ, அந்த அணிதான் இந்த டாஸ்கில் வெற்றி பெறும்.

இந்நிலையில் பிரியங்காவின் மிரரான ராஜூ, பிரியங்காவின் கண்ணாடியாக மாறி, தன் கருத்துக்களை தனக்கே உரிய கலாய் பாணியில் கூறினார். அவ்வாறு கூறும்போது, பிரியங்கா ஒரு இன்ஃப்ளூயன்ஸர் என்று தொடங்கி, பிரியங்காவின் சிரிப்பு, கோபம் என எல்லாவற்றையும் பற்றி கூறினார்.

அப்போது, “ஐக்கியை எப்பவாச்சும் ஒருநாள் நீ கொலை பண்ணிடுவேன்னு தெரியும்” என்று நகைச்சுவையாக கூறினார். ராப் பாடகி ஐக்கி பெர்ரியும் இமான் அண்ணாச்சியும் ஒருவருக்கொருவர் கண்ணாடியாக நடந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

One day you will kill iykki raju says to priyanka biggbosstamil5

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Priyanka Deshpande, Raju jeyamohan, VijayTelevision, Vijaytv will find this news story useful.