விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் கிராண்ட் ஃபினாலே நெருங்கிக் கொண்டிருக்க, தினந்தோறும் கஷ்டமான மற்றும் முழுக்க முழுக்க ஜாலியான டாஸ்குகள் மாறி மாறி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் ஒருநாள் பிக்பாஸ் டாஸ்.
ஒரு நாள் பிக்பாஸ்
இந்த ஒரு நாள் பிக்பாஸ் டாஸ்க் படி, பிக்பாஸ் ஒரு நபரை ஆட்கொண்டால் அந்த நபர் பிக்பாஸ் ஆக மாறுவார். அப்படி பிக்பாஸ் ஆக மாறும் ஒரு நபரின் கட்டுப்பாட்டில்தான் உண்மையான பிக்பாஸிடம் இருந்து அடுத்த கட்டளை வரும் வரை அந்த வீடு இருக்கும்.
மக்களுக்கு நம்மள புடிச்சி இருக்கு
முன்னதாக இதில் அமீர் ஒருநாள் பிக்பாஸ் ஆக மாறினார். அப்போது அமீர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய பிரியங்கா, “இந்த வீட்டில் தன்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரையும் ஹேப்பி ஆக வைத்து இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி இருப்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல!” என ராஜூவை குறிப்பிட்டு கூறினார். அதன் பிறகு பேசிய ராஜூ, “மக்களுக்கு நம்மள புடிச்சி இருக்கு, அதனால நாம இங்க இருக்கிறோம்!” என கூறினார்.
பிக்பாஸ் ஆன பிரியங்கா
இதேபோல் பிக்பாஸ் அன பிரியங்கா ராஜூவிடம், “ஆண்டியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?” என கேட்கிறார். அதற்கு ராஜூ, “எந்த ஆண்ட்டியை கேட்கிறீர்கள்?” என வினவுகிறார். அதற்கு, “பிரியங்கா ஆண்டியை பிடிக்குமா?” என கேட்க, ராஜூவோ, “பிரியங்கா ஆண்டியை எனக்கு ரொம்ப பிடிக்கும். எவ்வளவு வயதானாலும் அவங்க அத வெளிய காட்டிக்காம இருக்காங்க. அதனால ரொம்ப பிடிக்கும் ஆனால். பிரியங்கா அப்பப்ப மெண்டல் மாதிரி பிஹேவ் பண்ணுவாங்க!” என கூறுகிறார்.
பிக்பாஸ் ஆன ராஜூவிடம் பிரியங்கா அலப்பறை
பின்னர் பிக்பாஸ் ஆக மாறிய ராஜூ, பிரியங்காவை முதலில் மெயின் டோர் வழியாக வெளியே செல்லும்படி கட்டளை இடுகிறார். இதை கேட்டு அங்கு இருக்கும் அனைவரும் சிரிக்கின்றனர். அதன் பின்னர் பிரியங்கா ராஜூவை, “காலிங் இப்ப நீங்க ராஜூ இல்ல பிக்பாஸ்.. ” என்கிற ரேஞ்சுக்கு இறங்கி கலாய்த்தார்.
அதாவது, “பிக்பாஸ் இந்த வீட்டில் நீங்கள் உங்க கதையை சொல்லவே இல்லையே? நீங்கள் யாரு? விஜய் டிவில எதுக்காக இந்த வேலைக்கு சேர்ந்தீங்க?” என்றெல்லாம் ஏகத்துக்கும் கேட்டுவிட்டார். இதேபோல், தன்னை சிறுசு என்று அழைக்குமாறு ராஜூவிடம், அதாவது பிக்பாஸிடம் பிரியங்கா கேட்டுக்கொண்டார். ஏனென்றால், பிரியங்கா பிக்பாஸை எப்போது பெருசு என்று அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.