அமெரிக்கா: பிரபல உலக அழகி பட்டம் வென்ற ஒலிவியா பிரான்ஸஸ் கல்போ உள்ளாடை அணியாமல் பொது இடங்களில் தோன்றியுள்ள புகைப்படங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் வாங்கிய உலகின் விலையுயர்ந்த பிரபல BIKE! விலை எவ்வளவு தெரியுமா?
ஒலிவியா ஃபிரான்சஸ் கல்போ 2012 இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். ஒலிவியா பிரான்ஸஸ் கல்போ மிஸ் அமெரிக்கா என பல பட்டங்களையும் வென்றவர். அமெரிக்காவில் பிரபல மாடலாகவும் வலம் வருபவர். 50 லட்சம் பாலோவர்களை கொண்டு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் தான் ஒலிவியா பிரான்ஸஸ் கல்போ.
ஒலிவியா தற்போது மெக்ஸிகோவில் உள்ள கபோ சான் லூகாஸில் தனது காதலன் கிறிஸ்டியன் மெக்காஃப்ரி மற்றும் சகோதரிகளான அரோரா கல்போ மற்றும் சோபியா கல்போ ஆகியோருடன் சுற்ருலாவில் இருக்கிறார்.
ஒலிவியா கல்போ, ஜனவரி 15 ஆம் தேதி மெக்சிகோவின் கபோ சான் லூகாஸில் சுற்றுலாவில் இருந்த போது, பொது இடங்களில் உள்ளாடைகள் இல்லாமல் தனது ஸ்டைலான தோற்றத்தில் ஹை ஹீல்ஸ் காலணி உடன் பிரவுன் பேக்குடன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்வினைகளை அளித்தனர்.
சிலர் ஆடை சுதந்திரம் பற்றியும், சிலர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானித்தில் இந்த உடையுடன் நீங்கள் பயணிக்க வேண்டும் என்றும் ஆதராவாக கமெண்ட் செய்தனர். சில ரசிகர்கள் ஒலிவியா கல்போவை விமர்சனமும் செய்தனர்.
மெக்சிகோவிற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் போது ஒலிவியா கல்போ தனது ஸ்போர்ட்ஸ் ப்ராவுக்கு மேல் பிளவுஸ் அணிந்து கொள்ள கேட்கப்பட்டார். இதனால் அந்த நிகழ்வு பெரிய சர்ச்சை ஆனது. இச்சூழலில் ஒலிவியா கல்போ தனது இன்ஸ்டாகிராமில், ஏறக்குறைய நிர்வாண உடையில் மூன்று படங்களை வெளியிட்டு அந்த விமான நிறுவனத்தை கேலி செய்துள்ளார்.
உலக அழகி பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸுடன் 2013 முதல் 2015 வரை ஒலிவியா டேட்டிங் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுடன் 'கடைசி விவசாயி' படத்தை பார்த்த 'வலிமை' இயக்குனர் H வினோத்!