ARABIC KUTHU : "VIBE ஆகுறதுக்கு வயசு ஒரே தடையே இல்ல".. பாட்ட போட்டுக்கிட்டு குசும்பு பண்ண முதியவர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இதற்கு முன்பாக, நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | 'வாரிசு' படத்தில் குஷ்பு ரோல் இது தான்..! அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!

சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில், விஜய்யுடன் பூஜா ஹெக்டே, VTV கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. அதிலும் குறிப்பாக, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து பாடி இருந்த "ஹலமத்தி ஹபிபோ" என தொடங்கும் பாடல், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

இந்த பாடலில் நடிகர் விஜய்யின் டான்ஸ் தொடர்பான வீடியோக்களை பலரும் நடனமாடி வீடியோக்களாகவும் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்கள். இந்தியாவை தாண்டியும் அரபிக் குத்து பாடல் சக்கை போடு போட்டிருந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்த நிலையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இது தொடர்பான வீடியோ ஒன்றில், மூதாட்டி ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது அரபிக்குத்து பாடல் பின்னணியில் ஒலித்து கொண்டிருக்க, முதியவர் ஒருவர் அந்த பாடலில் வரும் டான்ஸ் ஸ்டெப் உள்ளிட்டவற்றுடன் சில அசைவுகளையும் சேர்த்து நாற்காலியை சுற்றி நடனமாடுகிறார். மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக, 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக 'வாரிசு' திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியாவது பற்றியும் இன்று (03.11.2022) அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "இது தான் எனக்கு விருப்பமான உடை" - சன்னி லியோன் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Old man dance for arabic kuthu song video viral

People looking for online information on Arabic Kuthu, Arabic Kuthu song, Dance will find this news story useful.