இளம் நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் அசோக் செல்வன். சூது கவ்வும், பீசா-2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் பிரபலமானார். மேலும் இந்த ஆண்டு ரித்திகா சிங், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருடன் இணைந்து இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் தற்போது அசோக் செல்வன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அடர்ந்த தாடியுடன், முடி வளர்த்து மாஸ் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் அசோக் செல்வனின் போட்டோவுக்கு தெறி கமன்ட்ஸ் கொடுத்து வர, இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
Tags : Ashok Selvan, Oh My Kadavule Tamil, Latest Photo