THALAPATHY66 : விஜய் - வம்சியுடன் மீண்டும் இணைந்த தமிழ் சினிமாவின் பிரபல MOST WANTED எடிட்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : விஜய் நடிக்கும் 66 படத்தில் பிரபல எடிட்டர் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

தீவிர அஜித் ரசிகர்... இப்போ தளபதி விஜய்க்கு இசையமைப்பாளர்! தமன் பகிர்ந்த சூப்பர் ட்வீட்

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார்.

இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் அறிமுகத் திரைப்படமான சென்னை - 600028 படத்தில் எடிட்டராக அறிமுகமானவர், இவரின் 50வது திரைப்படமும் வெங்கட்பிரபு இயக்கத்தில் வந்த "மாசு என்கிற மாசிலாமணி" படம் தான். 100 வது படமும் வெங்கட்பிரபு இயக்கத்தில்  மாநாடு படம் தான்.

தமிழ்சினிமாவின் தலைச்சிறந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளருமான பாலுமகேந்திரா அவர்களிடம் உதவி படத்தொகுப்பாளராக 'கதை நேரம்' தொடரில் பணியாற்றிய பெருமை கொண்டவர் பிரவீன் K.L.

'சரோஜா' படத்திற்காக தமிழக அரசின் சிறந்த படத்தொகுப்பாளர் விருதையும், 'ஆரண்யகாண்டம்' படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றவர் பிரவின்.K.L.

இவர் வித்தியாசமான திரைப்பட வகைமைகளுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

அவற்றில் சென்னை - 28 (Sports Drama), சரோஜா (Thriller), மங்காத்தா (Action Thriller), ஆரண்ய காண்டம் (Neo- Noir), அரவான் (Historical Epic Drama), காவியத்தலைவன் (Period Drama), கலகலப்பு (Comedy), என்றென்றும் புன்னகை (Romedy), மெட்ராஸ் (Political Drama), மாசு என்கிற மாசிலாமணி (Super Natural Horror), கொம்பன் (Action Drama), மருது (Action Drama) போன்ற படங்கள் முக்கியமானவை.

Thalapathy66 : விஜய்யுடன் நடிக்க போகும் சூப்பர் ஹீரோ.. இந்த காம்பினேஷன் பட்டைய கிளப்பும்!

தொடர்புடைய இணைப்புகள்

Official Vijay Thalapathy 66 Movie Editor Praveen KL

People looking for online information on Editor Praveen KL, Thalapathy 66, Thalapathy Vijay 66 Movie, Vijay will find this news story useful.