OFFICIAL: வா மோதிப்பாரு! பண்டிகை தினத்துக்கு வெளியாகும் வலிமை! மிரட்டலான அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் - எச். வினோத் - போனிகபூர் - யுவன் - நிரவ் ஷா முதன்முறையாக இணைந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளியானது.

ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. சுமார் 181 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்தது.

பின்னர் இதே கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்தது. கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.

'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிக்கபூர் படத்தின் ரிலீஸ் தேதியை டிவிட்டரில் அறிவித்துள்ளார். அதன் படி வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இதனை தல அஜித் ரசிகர்கள் #ValimaiPongal என டிவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Official VALIMAI RELEASE announcement comes with a Bang

People looking for online information on Ajith Kumar, Valimai will find this news story useful.