நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக பல வருடங்கள் கலக்கியவர் கவுண்டமணி. ரஜினி, கமல் என டாப் நட்சத்திரங்கள் முதல் சிம்பு வரை பல்வேறு நட்சத்திரங்களுடன் காமெடியில் கலக்கிய இவர், தனி ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இதனிடையே நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து தவறான வதந்தி சமூக வலைதளங்களில் வந்ததையடுத்து, இப்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் கூறியதாவது, ''யூ டியூப்பில் நடிகர் கவுண்டமணி அவர்களைப் பற்றி வதந்தீயை கிளப்பி உள்ளனர். அது உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இது போல் தவறான செய்தியை பரப்பும் அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார்.
அவர்களே அந்த யூ டியூப்பில் உள்ள கவுண்டமணி பற்றிய தவறான தகவலை உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.