தியேட்டர்ல தான் எங்க படம் ரிலீஸ்! OFFICIAL ஆக அறிவித்த சிவகார்த்திக்கேயன் தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்த படத்தின் ரிலிஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் ‘டாக்டர்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று டாக்டர் பட தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் டிவிட்டரில் புதிய போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஆக்ராவில் தனது பொழுதுபோக்கு திரைப்படமான டான் படப்பிடிப்பில் இருக்கிறார். இதை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார் மற்றும் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கிடையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Official siva karthikeyan doctor movie release date

People looking for online information on Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.