தமிழக உரிமத்தை தொடர்ந்து 'கோப்ரா' படத்தின் தெலுங்கு உரிமம்! கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகரான சியான் விக்ரம், தற்போது துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
>
Advertising

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள்,  சிங்கிள் பாடல்களான தும்பி துள்ளல் மற்றும் அதீரா உள்ளிட்ட பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. "உயிர் உருகுதே" என தொடங்கும் அடுத்த சிங்கிள், ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கோப்ரா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் ஆந்திரா - தெலுங்கானா மாநில திரையரங்க ரிலீஸ் உரிமத்தை NVR Cinema நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. 

Tags : Cobra, Vikram

தொடர்புடைய இணைப்புகள்

NVR Cinema for distribution of Cobra in Andhra and Telangana

People looking for online information on Cobra, Vikram will find this news story useful.