சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த KGF இயக்குனர்… வைரலாகும் ‘NTR 31’ FIRSTLOOK போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் NTR நடிப்பில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Advertising
>
Advertising

Also Read |  “மே 20-அ மறக்க மாட்டாரு…, எமோஷனல் ஆயிடுவாரு”… விஜய் அம்மா உடைத்த சீக்ரெட் Exclusive

பேன் இந்தியா படங்கள்

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான "RRR" படத்தில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடித்திருந்தனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். RRR படம் உலகமெங்கும் திரையரங்குகள் மூலமாக பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே சமீபத்தில் ரிலீஸான கேஜிஎஃப் 2 ஆம் பாகமும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனைப் படைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் இருந்து பாகுபலி 1 &2, புஷ்பா உள்ளிட்ட பல படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி ஹிட்டாகி வருகின்றன.

கவனம் பெற்ற கலைஞர்கள்…

இந்த பேன் இந்தியா ஹிட்டால் நடிகர்கள் பிரபாஸ், அல்லு அர்ஜுன், யாஷ், ஜூனியர் NTR மற்றும் ராம்சரண் போன்றவர்கள், இயக்குனர் ராஜமௌலி மற்றும் பிரசாந்த் நீல் பொன்றவர்கள் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளனர். இதனால் இவர்களின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்பொது பிரபாஸுடன் ‘சலார்’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ராம் சரண் இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்கிறார். ஜூனியர் NTR நடிக்கும் ‘NTR 30’ படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

சர்ப்ரைஸ் NTR 31 போஸ்டர்…

இந்நிலையில் இன்று NTR-ன் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடிக்கும் “NTR 31’ படத்தின் முதல் லுக் போஸ்டர்  இப்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ள போஸ்டரோடு “இரத்தத்தால் நனையாத எந்த மண்ணும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப் படாது. அவன் மண்… அவன் ராஜாங்கம்… ஆனால் ரத்தம் அவனுடையதில்லை.  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் NTR… இது உங்களுக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும் எனத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

NTR 31 first look poster revealed by Prasanth neel

People looking for online information on NTR 31, NTR 31 first look poster, Prasanth neel will find this news story useful.