அண்ணனின் மரணம்.. அஞ்சலி செலுத்தி கொள்ளிக்கட்டை போட்ட JR NTR.. புது பட நிகழ்வும் ஒத்தி வைப்பு ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜூனியர் என்டிஆர் அவரது மனைவி லட்சுமி இருவரும் இணைந்து  பிரபல தெலுங்கு நடிகர் தாரக ரத்னாவின் (வயது 39) இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

Advertising
>
Advertising

நடிகர் தாரக ரத்னா நடிப்பில் ஒக்டோபர் நம்பர் குராடு, தாரக், யுவ ரத்னா, பத்ராத்ரி ராமுடு, அமராவதி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. நடிகர் தாரக ரத்னாவிற்கு  அலேக்யா ரெட்டி என்ற மனைவி உள்ளார்.  2012 இல் ஆடை வடிவமைப்பாளர் அலேக்யா ரெட்டியை  தாரக ரத்னா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் தாரக ரத்னா கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 18) இரவு மாரடைப்பால் காலமானார். தாரக ரத்னா  இறுதிச்சடங்கு இன்று (பிப்ரவரி 20) நடைபெற்றது.

கடந்த மாதம், ஜனவரி 27-ம் தேதி ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், தாரகின் சகோதரருமான நாரா லோகேஷின் மாநிலம் தழுவிய ‘பாதயாத்திரை’ தொடக்க விழாவில் பங்கேற்றபோது தாரக ரத்னா மயங்கி விழுந்தார் என கூறப்படுகிறது. பின்னர் அவர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த நடிகர் தாரக ரத்னா நேற்று முன்தினம் பிப்ரவரி 18 அன்று காலமானார்.

அவரது உடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணா, நந்தமுரி கல்யாண் ராம், ஜூனியர் என்டிஆர்  உட்பட பல நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜூனியர் என்டிஆரின் சித்தப்பா நந்தமுரி மோகன் கிருஷ்ணாவின் மகன் தான் தாரக ரத்னா.  அண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மனேவி லட்சுமி உடன் ஜூனியர் என்டிஆர் வந்திருந்தார்.

பின்னர் தமது சித்தப்பா நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, தம்பி கல்யாண் ராம் உடன் இணைந்து தாரக ரத்னா உடலுக்கு கொள்ளிக்கட்டை போடும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

மேலும், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாக உள்ள 'என்டிஆர் 30' படத்தின் துவக்க விழா பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற இருந்தது. தாரக ரத்னா மரணத்தினால்  படத்தின் துவக்க விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மக்கள் தொடர்பாளர் வம்சி தமது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

Tags : NTR30, Jr ntr

தொடர்புடைய இணைப்புகள்

NTR 30 Opening Ceremony Postponed due to Taraka Ratna Death

People looking for online information on Jr ntr, NTR30 will find this news story useful.