"யாரையும் HURT பண்ண இல்ல".. குக் வித் கோமாளி சர்ச்சை.. உடைக்கும் வெங்கடேஷ் பாத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Televisionவிஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக மக்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் அது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தான்.

Advertising
>
Advertising

குக்கு வித் கோமாளி

ஆம், ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கின்றன. இதன் முதலாவது மற்றும் இரண்டாவது சீசன்களை தாண்டி மூன்றாவது சீசனில் என்ன புதுமைகள் இருக்கப்போகின்றன? எந்த போட்டியாளர்கள் புதிதாக களமிறக்கப்படப் போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடத்தில் ஏற்கனவே அதிகரித்திருந்தன.

குக்கு வித் கோமாளி 3வது சீசன்

அந்த வகையில் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடர்பான ப்ரோமோ வெளியானதுமே இந்த சீசனை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே துளிர்விடத் தொடங்கியது. செஃப் வெங்கடேஷ் பாத் மற்றும் செஃப் தாமோதரன் இருவரும் நடுவர்களாக அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி விஜே ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார். இதில் போட்டியாளர்களாக பிரபல நடிகர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இதேபோல் கோமாளிகளும் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கி விட்டது.

போட்டியாளர்கள்

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மனோபாலா, நடிகை வித்யூலேகா, நடிகர் சந்தோஷ் பிரதாப், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன் உள்ளிட்ட பலரும் சமைக்கும் போட்டியாளர்களாக களமிறக்கப் பட்டனர். இதனைத் தொடர்ந்து நடிகை ஷ்ருதிகா தற்போது இந்த நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக இணைந்திருக்கிறார். பிரபல பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர் சில திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

இவர் இந்நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்ததில் இருந்து சிரித்துக்கொண்டே அனைவரிடமும் பேசி பழகுகிரார். இவருடைய எதார்த்த இயல்பு ரசிகர்கள், சக போட்டியாளர்கள், கோமாளிகள் என அனைவருக்குமே மிகவும் பிடித்துவிட்டது.

கோமாளிகள்

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, மணிமேகலை, பாலா, குரேஷி, மூக்குத்தி முருகன், சுனிதா, சக்தி, சூப்பர் சிங்கர் பரத் மற்றும் ஷீத்தா கிளாரின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுள் மூக்குத்தி முருகனை அவ்வப்போது சக போட்டியாளர்களும் செஃப்களும் கலாய்ப்பது உண்டு. இதேபோல் சிவாங்கியையும் மணிமேகலையும் அனைவராலும் கலாய்க்கப்படுவர்.

ஸ்போர்டிவ்

அதிலும்  சிவாங்கி மற்றும் மணிமேகலை எல்லாம் தாங்களாகவே முன்வந்து கலாய்ப்பை கண்டிப்புடன் ஏற்றுக்கொள்வார்கள். இவை எல்லாம் கோமாளிகள் செய்வதன் ஒரே நோக்கம் எண்டர்டெயின்மெண்ட் தான். யார் மனதையும் புண்படுத்தாமல் பிறரை கலாய்ப்பதும், தங்களை தாங்களே பல்பு வாங்கி கலாய்த்துக்கொள்வதும் இந்த கோமாளிகளின் ஸ்போர்டிவான சிறப்பியல்பு.

"மன அழுத்தமா இருக்கு".. ரசிகரின் பதிவுக்கு ஜீ.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி பதில்!

இந்நிலையில் தான் சூப்பர் சிங்கர் பரத்தை செஃப் வெங்கடேஷ் பாத், செல்லமாக அடிப்பதும் துரத்துவதுமாக இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது செஃப் வெங்கடேஷ் பாத் மனம் திறந்துள்ளார்.

யாரையும்  Hurt பண்ண அல்ல.

இதுகுறித்து தாமாகவே பதிவு செய்த செஃப் வெங்கடேஷ் பாத், “அனைவரும் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.  கண்டிப்பா நீங்க Bed-க்கு போறதுக்கு முன்னாடி  சிரிச்சிட்டு தான் தூங்கப் போவீங்க என்பதுல நான் உறுதியா இருக்கேன்.  எனினும் இது ஒரு TV show தான், இதனை எவ்வித judgement-ம் இல்லாமல் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் நாங்கள் செய்வது அனைத்தும் யாரையும் Hurt பண்ணுவதற்கானது அல்ல.

"நடிச்ச 4-ம் Flopங்க".. ஐயோ சிரிக்குறாங்களே.. ஒரே நாள்ல fans-ஐ அள்ளிய பிரபல நடிகரின் பேத்தி! CWC 3

சிலரை காயப்படுத்துவது போன்று தோன்றலாம். ஆனால் நோக்கம் உண்மையில் சிரிக்க வைப்பதுதான். மகிழ்விப்பதுதான். ஷூட் பண்ணும்போது அவ்வளவு fun-ஆகவே இருக்கும். அதிலும் சில இடங்களில் ஒருவரை ஒருவர் அடிக்குற மாதிரி இருக்கும். ஆனால் யாரும் யாரையும் அடிக்க மாட்டோம். இது எண்டர்டெயின்மெண்ட் தான். எனவே என்ஜாய் பண்ணி watch பண்ணுங்கள். easy ஆகவும் light ஆகவும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Not to hurt anyone Venkatesh Bhat Opens up CookWithComali3

People looking for online information on Cook with comali 3, Cooku with comali, Roshini Haripiriyan, Shruthika, Sivaangi, Super Singer Barath, Venkatesh Bhat will find this news story useful.