மணிக்கூண்டு டாஸ்க்கில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணியினர் கேப்டன் போட்டியில் கலந்து கொள்ளலாம் என பிக்பாஸ் அறிவித்தார். இதையடுத்து ஆரி, ரியோ, கேப்ரியலா மற்றும் சோம், அர்ச்சனா, சம்யுக்தா ஆகிய 6 பேரும் இதில் கலந்து கொண்டனர். கேப்டன் என எழுதி இருக்கும் தங்களது புகைப்படம் தாங்கிய கட்டை போல ஒன்றை போட்டியாளர்கள் பலகை போன்ற ஒன்றை வைத்து தாங்கிப்பிடிக்க வேண்டும்.
மேலும் சவுண்ட் ஒலிபரப்பாகும் போது அதை வைத்துக்கொண்டு எல்லைக்கோட்டில் நடந்து பின்னர் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாக இருந்தது. இதில் அர்ச்சனா போட்டி ஆரம்பித்த உடனே வெளியேறி விட்டார். அதற்கடுத்து சம்யுக்தாவும் சென்று விட்டார் (கேப்டன் அப்படிங்கிற வார்த்தையே எனக்கு புடிக்காது) இதையடுத்து கேப்ரியலா, சோம்,ஆரி, ரியோ நால்வரும் முயற்சி செய்தனர்.
கேப்டன் டாஸ்க்கிற்கும் கேப்ரியலா, சோமிற்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான் போல. அடுத்தடுத்து இருவரும் விலகினர். இதையடுத்து ரியோ, ஆரி இருவரும் நீண்ட நேரமாக தாங்கி பிடித்து பிடிவாதமாக நின்றனர். இறுதியில் ரியோ இந்த டாஸ்க்கில் வென்றார். போட்டியின்போது கேப்ரியலா பலகையை தன்மீது வைத்து பிடித்திருப்பதாக ஆரி குற்றஞ்சாட்டினார். கேப்ரியலா அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சோமும் அதேபோல தான் செய்தார், ஆரி அதை கவனிக்க தவறிவிட்டார் என ரசிகர்கள் தற்போது ஆதாரத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.