"நிதானம் தேவை".. பிக்பாஸ் வாசித்த நாமினேஷன் லிஸ்ட்.. யார் யார் இருக்காங்க? BIGGBOSS6TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை ICU-வில் அனுமதி.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மெட்டிஒலி சாந்தி முதல் எலிமினேஷனாக வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் அசல், ஷெரினா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் கடந்த வாரத்தில் vj மகேஷ்வரி எலிமினேஷன் ஆனார்.

இந்நிலையில், பிக்பாஸ் அன்சீன் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது, குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக சிலரை இந்த வார எவிக்ஷன் ப்ராசஸ்க்கு நாமினேட் செய்வதாக கூறுகிறார் பிக்பாஸ்.

போட்டியாளர்களிடம் பிக்பாஸ் பேசுகையில்,"ரொம்ப இனிமையாகவே பழகுறாரு, சனிக்கிழமை ஆனா மட்டும் கியூட்டா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க, நிதானம் தேவை, ஓவர் கான்ஃபிடன்ட், தப்பா தெரியுது, பட்டும் படாமல் இருக்குறாரு, வேகம் குறைஞ்சிடுச்சு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வார எவிக்ஷன் ப்ராசஸ்க்கு நாமினேட் ஆனவங்க தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ராபர்ட், ஆயிஷா, கதிரவன் மற்றும் ஜனனி" என்கிறார்.

 

Also Read | "விருப்பம் இருந்தா மத்தவங்ககிட்ட பேசப்போறேன்"..ஜனனி - அமுதவாணன் இடையே நடந்த வாக்குவாதம்

தொடர்புடைய இணைப்புகள்

Nomination list by biggboss in House by various Reasons

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Nomination list, Vijay Television, Vijay tv will find this news story useful.