பிக்பாஸ் வீட்டில் பல்வேறு டாஸ்குகள் அடுத்தடுத்து நடைபெற்றன. கதை சொல்லும் டாஸ்க் தொடங்கி, கடைசியாக பால் சேகரிக்கும் டாஸ்க் வரை நடந்த டாஸ்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டியாளர்களிடையே வேகம் அதிகரித்தது.
இதனையடுத்து பொம்மை டாஸ்க் அறிவிக்கப்பட்ட, அடுத்தடுத்த நாட்களில் போட்டியில் வீரியம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போட்டியாளர்களும் முன்பைவிட இன்னும் ஆக்ரோஷமாகவும் அதீத உணர்வுகளுடனும் விளையாடத் தொடங்கி விட்டனர். எப்போது.. எங்கு சண்டை வெடிக்கும்.. யார் எப்போது யாருடன் மோதுவார்கள்.. என்கிற பரபரப்பு தற்போதெல்லாம் பிக்பாஸ் பார்க்கும்போது தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடிவதில்லை.
அந்த அளவுக்கு நாளும் நாளும் சர்ச்சைக்குரிய சம்பவங்களகவே அரங்கேறி வருகின்றன. இத்தனைக்கும் நடுவே பிக்பாஸ் போட்டியாளர் கடைசியாக செய்த நாமினேஷனில் வெற்றி பெற்றவர்களுக்கான அங்கீகாரம், விருதுகளாகவே இந்த முறை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆம், பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த ‘பிக்பாஸ்’ விருது நிகழ்ச்சியை கலகலப்பாக பிரியங்கா மற்றும் ராஜூ இருவரும் தொகுத்து வழங்கினார்கள். இதில், அனைவருக்கும் ஒவ்வொரு கேட்டகரியில் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ‘கன்னித்தீவு’ பாட்டுக்கு, ஐக்கியின் தரமான டான்ஸூடன் விழா தொடங்கியது.
அதன்பின்னர், ஆகிய பெஸ்ட் பிளேயர், பெஸ்ட் எண்டர்டெயிண்ட்மெண்ட், பெஸ்ட் விருதுகள் கொடுக்கப்பட்டன. இதில் பெஸ்ட் பிளேயர் விருது நிரூப்க்கு வழங்கப்பட்டது.
இதனை அண்ணாச்சி மற்றும் தாமரை வழங்கினர். தொடர்ந்து பெஸ்ட் எண்டர்டெயிண்ட்மெண்ட் விருதினை 9 ஓட்டுகள் பெற்ற ராஜூ பெற்றார். இந்த விருதை பாவனி மற்றும் சிபி வழங்கினர்.
இதேபோல் பெஸ்ட் டிரெஸ்ஸெடு விருதினை அக்ஷராவுக்கு கொடுத்தனர். இந்த விருதினை நிரூப் மற்றும் ஐக்கி கொடுத்தனர்.
இந்த விருதை ராஜூவுக்கு கொடுக்கும்போது, “நீ புடுங்கியது பூரா தேவையில்லாத ஆணி தான்!” என்று இசைவாணி குறிப்பிட, அதற்கு பதிலளித்துக்கொண்டே விருதை பெற்றுக்கொண்ட ராஜூ, “இனிமேல் தேவையான ஆணிகள் புடுங்கப்படும்” என்று பஞ்ச அடித்தார். இந்த பஞ்ச் ப்ரோமோவில் இடம் பிடித்தது எனினும் எபிசோடில் இடம் பெறவில்லை. இதனிடையே ஜால்ரா, டம்மி பீஸ், சகுணி எனும் தந்திர மூளை ஆகிய விருதுகளும் அடுத்த எபிசோடுகளில் வழங்கப்படுகின்றன.