டைட்டில் கார்டுல சிகரெட் அட்வைசரியே இல்லாத ‘ஃபாரின் சரக்கு’ படம்.. இதுதான் காரணம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபாரின் சரக்கு’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertising
>
Advertising

Also Read | விக்னேஷ் சிவன் டைரக்‌ஷனில் நடித்த தமிழக முதல்வர்..? ஏ.ஆர்.ரஹ்மான் இசையா.?Exciting தகவல்.!

ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரித்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி, படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியதோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர் ஆகிய மூன்று பேரும் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே குறும்படங்களை எடுத்துள்ளனர். பிறகு மூவருக்கும் சினிமா மீது இருந்த ஆசை மற்றும் ஆர்வத்தினால் திரைப்படத்துறையில் நுழைவதென்று முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, தங்களைப் போல் சினிமா மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்களுடைய படம் மூலம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்த இவர்கள், ‘ஃபாரின் சரக்கு’ படத்தில் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 300 கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளனர். இப்படத்துக்கு சிவநாத் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்ராஜ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளராக பிரகாஷ்ராஜ் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் கோபிநாத் பேசுகையில், “பல போராட்டங்களை சந்தித்து இந்த படத்தை எடுத்திருந்தாலும் இறுதியில் படம் பார்த்த போது இயக்குநர் சொன்னதை விட படத்தை சிறப்பாக எடுத்துக்கொடுத்தார். நிச்சயம் செலவு செய்யும் டிக்கெட் பணத்திற்கு முழு திருப்தியளிக்கும் வகையில் படம் இருப்பதோடு, முழுமையான ஆக்‌ஷன் எண்டர்டெயின்மெண்ட் படத்தை பார்த்த அனுபவத்தையும் தரும். நிச்சயம் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். இப்போது பான் இந்தியா என்ற ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளது. ஆனால், எங்கள் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதே எங்களுக்கு பான் இந்தியா ரிலீஸ் போல் இருந்தது. அவ்வளவு கஷ்ட்டப்பட்டோம்.” என்றார்

இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமி பேசுகையில், “படம் பார்த்த பிறகு ‘ஃபாரின் சரக்கு’ என்றால் உண்மையில் என்ன? என்பது உங்களுக்கு புரியும். குஜராத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு கதைக்களம். அதன் மையப்புள்ளி தான் ‘ஃபாரின் சரக்கு’.  படம் வழக்கமான பாணியில் இருக்காது. சற்றி வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறோம். நன்றி.” என்றார்.

‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்புக் கொண்ட இப்படத்தின் எந்த ஒரு இடத்திலும் சிகரெட் புகைப்பது மற்றும் மது அருந்தும் காட்சிகள் இல்லாததால், மது மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு செய்யும் எச்சரிக்கை டைட்டில் கார்டு இல்லாத படமாக இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ரத்த தானத்துக்குன்னே புது App-ஆ..? கலக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்.! குவியும் பாராட்டுகள்.

தொடர்புடைய செய்திகள்

No health advisory in foriegn sarakku title card

People looking for online information on Foriegn sarakku, Upcoming movie release, Upcoming tamil release will find this news story useful.