நிவின் பாலியின் மேக்கப்-மேன் உயிரிழப்பு.. கிருஸ்துமஸ் கொண்டாட இருந்தவருக்கு நிகழ்ந்த சோகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் நிவின் பாலியின் மேக்கப் மேன் விபத்தில் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் தமிழிலும் நேரம், ரிச்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரேமம் படத்தின் மூலம் இவர் தமிழில் பெரும் ரசிகர்களை தன்வசம் கொண்டுள்ளார். 

இந்நிலையில் நடிகர் நிவின் பாலியின் மேக்கப் மேனாக இருந்த ஷாபு புல்பள்ளி என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஸ்துமஸ் பண்டிகைக்காக மரத்தின் மீது ஸ்டார் கட்ட ஏறிய இவர், தடுமாறி கீழே விழுந்துள்ளார். 

இதில் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

நிவின் பாலியின் மேக்கப் மேன் மரணம் | Nivin pauly's make up man shabu pulpally death in accident

People looking for online information on Nivin Pauly, Nivin Pauly Makeup Man, Shabu Pulpally will find this news story useful.