ஆக்ரோஷமான லுக்கில் நிவின் பாலி.. மிரட்டும் 'படவெட்டு' டீசர்.. படம் ரிலீஸ் எப்போ??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நிவின் பாலி. ஆரம்பத்தில், சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் கவனம் ஈர்த்த நிவின் பாலி, 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற சினிமா உலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

Advertising
>
Advertising

மேலும் 1983, பெங்களுர் டேய்ஸ், ஆக்ஷன் ஹீரோ பிஜு, மூத்தோன் உள்ளிட்ட ஏராளாமான படங்கள், நிவின் பாலிக்கு என்று பிரத்யேகமான ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி இருந்தது.

சமீபத்தில், அப்ரித் ஷைன் இயக்கத்தில், நிவின் பாலி நடித்திருந்த 'மஹாவீர்யார்' திரைப்படம், கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நிவினுடன் ஆசிப் அலி, லால் அலெக்ஸ், சித்திக் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

மஹாவீர்யார் படத்திற்கு அடுத்ததாக Saturday Night, படவெட்டு, துறமுகம், ராம் இயக்கத்தில் புதிய படம் என அடுத்தடுத்து மிக பிஸியாக நிவின் பாலி இயங்கி வருகிறார். அந்த வகையில், தற்போது 'படவெட்டு' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், சினிமா ரசிகர்கள் பலரையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.

அரசியல் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றி படவெட்டு திரைப்படம் எடுத்துரைக்கும் வகையியல் டீசர் அமைந்துள்ளது. அதே போல, நிவின் பாலியின் வித்தியாசமான லுக் கூட பெரிய அளவில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. லிஜு கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், நிவின் பாலியுடன் சைன் டாம் சாக்கோ, அதிதி பாலன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும், படவெட்டு திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி, திரை அரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Nivin pauly padavettu teaser released with movie release date

People looking for online information on Nivin Pauly, Padavettu, Teaser will find this news story useful.