உடல் எடையை குறைத்த நிவின் பாலி.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புது லுக் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள நடிகர் நிவின் பாலி உடல் எடையைக் குறைத்து புது லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Nivin Pauly New Look went viral on social media
Advertising
>
Advertising

Also Read | Varisu : அட.. ஆமால்ல 😍 ஆறு வருசத்துக்கு பிறகு தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. ‘மலர்வாடி ஆர்ஸ் கிளப்’ படத்தின் மூலம் பிரபலமான நிவின் பாலி, அடுத்தடுத்து ’தட்டத்தின் மரையத்து’, ‘1983’, ‘நேரம்’, 'ஒரு வடக்கன் செல்ஃபி', ஓம் சாந்தி ஓசானா, பிரேமம், ஆக்சன் ஹீரோ பிஜூ, சகாவு, மூத்தோன் ஆகிய படங்கள் மூலம் முன்னணி நடிகரானார்.

Nivin Pauly New Look went viral on social media

குறிப்பாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘பிரேமம்’ படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. தற்போது தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சற்று உடல் எடை அதிகரித்த நிவின் பாலி, தற்போது மீண்டும் பழையபடி மெல்லிய உடலமைப்புக்கு மாறியுள்ளார். புது லுக்கில் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் நிவின் பாலி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

Also Read | BREAKING: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் சூரி.. இயக்குனர் இவரா? செம்ம

உடல் எடையை குறைத்த நிவின் பாலி.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புது லுக் புகைப்படங்கள்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nivin Pauly New Look went viral on social media

People looking for online information on Nivin Pauly will find this news story useful.