நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள 'துறமுகம்' ரிலீஸ் எப்போது.. மாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் 'Thuramukham' இந்தப் படத்தை இயக்குனர் ராஜீவ் ரவி இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் உடன்  உதவி இயக்குனராகவும், நடிகர் அஜித்தின் ஜனா படத்தின் ஒளிப்பதிவாளரும் ஆவார்.

Advertising
>
Advertising

இப்படத்தில் நிவின் பாலி மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் 2021 சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் ஜனவரி 2022ல் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020ஆம் ஆண்டு நிறைவடைந்தது ஆனால் கொரோனா காரணமாக வெளியிட தாமதமானது.

இந்தப்படம்  1940 மற்றும் 50 களில் கொச்சியில் உள்ள மட்டஞ்சேரி துறைமுகத்தில் இருந்த இழிவான  முறையின் அடித்தட்டு மக்கள் பட்ட கஷ்டங்களின் பின்னணியில் எடுக்கப்பட்டது ஆகும்.

துப்பாக்கிச் சூடு

வேலை உத்தரவாதம், முதலாளித்துவத்தின் அராஜகம், அடிமைத்தனமான திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் போராட்டங்களின் பின்னணியில் உள்ள கதைகளும் இப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. அந்த போராட்டங்களுக்கு எதிரான காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் மூன்று தொழிலாளர்களின் கொலைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த படத்தின் கதை .

பெரிய எதிர்பார்ப்பு

'Thuramukham' படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் உச்சத்தில் இருக்கிறது,ஏனென்றால் இயக்குனர் ராஜிவ்  ரவியின் முந்தைய படங்களான 2016ஆம் ஆண்டு வெளிவந்த துல்கர் சல்மானின் 'Kammattippadam' மற்றும் 2013 ஆம் ஆண்டு பகத் பாசில் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவந்த 'Annayum Rassoolum'  போன்ற படங்கள் மிக பெரிய அளவில் பேசப்பட்ட படங்கள். கேரளத்து மக்கள் மட்டுமல்லாமல் ராஜிவ்  ரவியின் இயக்கத்தில் ஒரு படம் வருகிறது என்றால் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை பற்றி நிறைய பேச துவங்கி விடுவார்கள்.


ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போயின

இப்படம் மே 13, 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால், ரிலீஸ் செய்யப்படவில்லை. அதன் பின் டிசம்பர் 2, 2021 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அன்று நடிகர் மோகன்லாலின் 'மரக்கர் அரபிக்கடலின் சிம்ஹம்' படம் வெளிவந்ததால் இப்படம் ரிலீஸ் செய்யவில்லை. பின் டிசம்பர் 24 கிறிஸ்துமஸ் அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றும் ரிலீஸ் செய்யவில்லை. தற்போது ஜனவரி 20, 2022 அன்று இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொன்ன தேதியில்

'Thuramukham'  படத்தின் கலர் டோன் பார்க்கும் பொழுதே படத்தில் வேலை செய்த அத்தனை டெக்னீசியன்சும் மிகப்பெரிய மெனக்கெடுதலை, வித்தியாசமான இந்த திரைக்கதையில் கடினமாக உழைத்து இருக்கின்றனர் என்பது புரிகிறது . மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக  நமக்கு தோன்றுகிறது.

உரிமைக்காக போராடும் மக்களின் மனநிலை, அதிகாரத்தில் இருக்கும் மனிதனுடைய மனநிலை, இவ்விரண்டும் காலம்காலமாக சந்தித்து வரும் சூழ்நிலை, இதனால் ஏற்படக்கூடிய அதிபயங்கர பிரச்சனைகள், உயிரிழப்புகள், மனித வாழ்க்கையில் ஏற்படும் மிகப்பெரிய வலி  என்று பல விஷயங்களை ஒட்டுமொத்தமாக கூறுகின்ற, இந்த படம் 2022ஆம் ஆண்டு நிறைய விவாதங்களை கண்டிப்பாக சினிமா ரசிகர்களிடையே கொண்டுவரும் என்பது தான் நிதர்சனமான உண்மை. இருப்பினும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விரைவில் சொன்ன தேதியில் இந்த படம் ரிலீசாக வேண்டும் என்று அனைவரும் மிகவும்  ஆர்வமாக இருக்கின்றனர்.

Nivin paul Thuramukham gets new release date

People looking for online information on நிமிஷா சஜயன், நிவின் பாலி, ராஜீவ் ரவி, Rajeev Ravi, Thuramukham will find this news story useful.