பிரியங்கா மோகனை தொடர்ந்து.. தனுஷ் படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில், பிரியங்கா மோகனை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகையும் தற்போது இணைந்துள்ளது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அந்த XL ஃபைல் படிச்சுட்டு புரியல Sirனு சொன்னேன்.. அதான் பொன்னியின் செல்வன்!" - PS1 Team Fun Interview

கேப்டன் மில்லர் படத்தினை ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் மோஷன் போஸ்டர் கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

1930கள் - 40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக கேப்டன் மில்லர் உருவாகவுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் பணிகளை எடிட்டர் நாகூரன் மேற்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கேப்டன் மில்லர் படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷென் இணைந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் லுக் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இதன் பின்னர், டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை பிரியங்கா மோகன், கேப்டன் மில்லர் படத்தில் இணைந்துள்ளது தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிட்டிருந்தது. சந்தீப் கிஷென், பிரியங்கா மோகனை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகையும் தற்போது கேப்டன் மில்லர் திரைபடத்தில் இணைந்துள்ளார்.

சில்லுக் கருப்பட்டி, செத்தும் ஆயிரம் போன், சூழல் (வெப் சீரிஸ்) உள்ளிட்ட படைப்புகள் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுபவர் நடிகை நிவேதிதா சதீஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Also Read | Vendhu Thanindhathu Kaadu : "இரவு நல்லா தூங்கிட்டு வாங்கனு சொன்னதுக்கு காரணம்.." - ஆதங்கப்பட்ட கௌதம் மேனன்.!

தொடர்புடைய இணைப்புகள்

Nivedhithaa sathish joined in dhanush captain miller movie

People looking for online information on Captain Miller Movie, Captain miller movie updates, Dhanush, Nivedhithaa Sathish will find this news story useful.