THIRUCHITRAMBALAM: "LIFE-லயும் BEST FRIEND ஆயிட்டாங்க" - பிரபல ஹீரோயின் குறித்து தனுஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்டு 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஒரே வருஷத்துல 2 -வது Car -ஆ..? கலக்கும் GPமுத்து.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல?

இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முறையே தனுஷின் தாத்தா மற்றும் அப்பா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு  ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ விழாவில் நடிகை நித்யா மேனன் பற்றி பேசிய நடிகர் தனுஷ், “நடிகை நித்யா மேனனின் திறமை பற்றி பேசிக் கொண்டே போகலாம். இன்னும் பத்து நிமிடம் தான் பகல் வெளிச்சம் இருக்கும், அதற்குள் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் என்றால், நித்யா மேனன் இருந்தால் தைரியமாக சூட்டிங் போய்விடலாம்.. அந்த காட்சி நிறைவடைந்து விடும். அப்படி ஒரு அதிக திறமை உள்ளவர்.

(நித்யா மேனனை பார்த்து)  உங்களுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன், நான் அவ்வளவு ஈஸியாக சொல்ல மாட்டேன். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனனை சிறந்த தோழி ஷோபனா என்று அறிமுகப்படுத்துவோம். இப்போது என் வாழ்க்கையிலும் அவர் எனது சிறந்த தோழியாக இருக்கிறார்.” என்று குறிப்பிடுள்ளார்.

Also Read | Thiruchitrambalam: "ஆளு கரடு முரடு.. அவர் என் டார்லிங்.. என் செல்லப்பிள்ளை" - தனுஷ் நெகிழ்ச்சி..

தொடர்புடைய இணைப்புகள்

Nithya menon best friend in life Thiruchitrambalam Dhanush

People looking for online information on Bharathiraja, Dhanush, Thiruchitrambalam will find this news story useful.