"சார் ஷோபனா சார்".. குழந்தை நட்சத்திரமாக அசத்தும் நித்யா மேனன்.. வைரல் THROWBACK VIDEO!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ஒருவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது நடித்த காட்சிகளின் தொகுப்பு தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Ponniyin Selvan : "இன்னொரு Period ஃபிலிம் மட்டும் வேணாம்".. ஷூட்டிங் நடுவுல த்ரிஷா எடுத்த முடிவு.. Exclusive!!

குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி, இன்று தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் பல அசத்தலான திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார் நித்யா மேனன்.

உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நித்யா மேனன் நடிப்பு, ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது. சமீபத்தில் கூட மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷுடன் நித்யா மேனன் இணைந்து நடித்திருந்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அது மட்டுமில்லாமல், இந்த படத்தில் நித்யா மேனனை பார்த்த பலரும் இப்படி ஒரு தோழி நமக்கு இல்லையே என ஏங்கும் அளவுக்கு அவரது காட்சிகள் படத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நித்யா மேனன் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்த காட்சிகள் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

'ஹனுமான்' என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி இருப்பார் நித்யா மேனன். இதில், நடிகை தபுவுடன் இணைந்து நித்யா மேனன் குழந்தையாக வருகிறார். அதில் க்யூட் குழந்தையாக வரும் நித்யா மேனன் காட்சியை பாடலுடன் இணைத்து எடிட் செய்து, தற்போது ரசிகர்கள் பலரும் Vibe செய்து வருகின்றனர். குழந்தையாக நடித்த போதே மிகவும் அழகாக நித்யா மேனன் இருக்கிறார் என்றும் ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Also Read | வெங்கட் பிரபு - நாகசைதன்யா இணையும் புதிய படம்.. வெளியான அதிரடி அப்டேட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Nithya menen cute video as child artist in movie

People looking for online information on Nithya menen cute video, Nithya Menon, Nithya menon child artist will find this news story useful.