யுவன், ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட "கொடுவா" படத்தின் டைட்டில் டீசர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின் சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், உருவாகியுள்ள படம் "கொடுவா".

Advertising
>
Advertising

இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர்.  சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிதின்சத்யா சென்னை 28 (2) படத்திற்கு பிறகு நாயகனாக நடிக்கும் திரைப்படம் "கொடுவா".  இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் என ஒரு அழுத்தமான ஜனரஞ்சக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  

மிக பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சாத்தையா. இப்படத்திற்காக படக்குழு இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றி  உண்மையான இறால் வளர்ப்பு பண்ணையில் தங்கி படம் பிடித்துள்ளது.  இப்படத்தின் கதாநாயகன் நிதின்சத்யா இராமநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு  அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன் நடிக்க உடன் ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தரண் குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை, VJ சாபு ஜோசப் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை சுரேஷ் கல்லரி மேற்கொள்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 

மக்கள் தொடர்பு - சதீஷ் - சிவா (AIM)

தொடர்புடைய இணைப்புகள்

Nithin sathya samyuktha Koduva movie title teaser கொடுவா

People looking for online information on Koduva title teaser கொடுவா, Nithin Sathya, Samyuktha will find this news story useful.