நேற்று முன்தினம் சோம் மற்றும் பாலா இடையிலான கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. இதில் சோம் சார்பாக சக போட்டியாளர்கள் ஆஜராக, பாலா சார்பில் யாரும் முன்வரவில்லை. பப்பெட் என்னும் வார்த்தைக்கு சோம் விளக்கம் கேட்க அப்போது பாலாஜி கமல் சார் முன்னிலையில் தான் இதை சொன்னேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நான் சொன்னதை அடுத்து ஆடியன்ஸ் அப்படித்தான் நினைக்குறாங்க என கமல் தெரிவித்ததாக, பாலாஜி சொன்னார். அவருக்கு ஷிவானி, சம்யுக்தா இருவரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இதற்கு நிஷா பயங்கர எதிர்ப்பு தெரிவித்தார். கமல் சார் அப்படி சொல்லல, ஆடியன்ஸ் அப்படி நெனைக்குறாங்களான்னு பாப்போம்னு தான் சொன்னார் என உண்மையை தெரிவித்தார். ஆனால் பாலாஜி, நிஷாவின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதைப்பார்த்த ரசிகர்கள் கமல் பேசியதையும், பாலா சொன்னதையும், கோர்ட் டாஸ்க் விவாதங்களையும் வைத்து ஒரு குறும்படம் போட்டு விட்டனர். வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து கடைசில கமல் சார் சொன்னதையே மாத்தி சொல்லிட்டியேப்பா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் ஏராளமான பஞ்சாயத்துகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.